close
Choose your channels
warrior
iravin_nizhal

ரொமான்ஸ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர்? மீண்டும் கிராமத்து கேரக்டரா?

Sunday, May 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 31 என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிதிஷங்கரின் முதல் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்பு நடிக்க உள்ள ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நாயகியாக அதிதிஷங்கர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது ரொமான்ஸ் படங்களை இயக்குவதில் வல்லவரான கௌதம் மேனனின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ’கப்பேலா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திலும் அதிதிஷங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகி கேரக்டர் கிராமத்து பெண் என்ற நிலையில் மீண்டும் அதிதிஷங்கர் கிராமத்தில் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.