close
Choose your channels
siren
lal_salaam

6 ஆண்டுகள் கழித்து 'அடங்கமறு' இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ இவர்தான்..!

Wednesday, November 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ’அடங்கமறு’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கி இருந்தார் என்பதும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு ஒரு சில பிரபல நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே அந்த படங்கள் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 6 ஆண்டுகள் கழித்து ’அடங்கமறு’ இயக்குனரின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. ’அடங்கமறு’ படத்தில் நடித்த ஜெயம் ரவி தான் அவரது அடுத்த படத்தின் ஹீரோ என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு ஆக்சன் திரில்லர் படம் என்றும் இந்த படத்தை ’அடங்கமறு’ படத்தை தயாரித்த ஹோம் மூவி ராக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.