சிறுமிக்கு பாலியல் தொல்லை: நடிகைக்கு 8 ஆண்டுகள், கணவருக்கு 14 ஆண்டுகள் சிறை!


Send us your feedback to audioarticles@vaarta.com


13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகைக்கு 8 ஆண்டுகளும் அவரது கணவருக்கு 14 ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை சாரா 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நடிகை சாரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு உடந்தையாக இருந்த அவருடைய கணவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது .
நடிகை சாராவுக்கு 8 ஆண்டுகளும் அவருடைய கணவருக்கு 14 ஆண்டுகளும் சிறை தண்டனை என்ற தீர்ப்பு ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.