பழைய ஃபார்முக்கு திரும்பிய யாஷிகா… அரபிக்குத்துப் பாடலுக்கு ஆடிய வேறலெவல் வீடியோ!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றவர் நடிகை யாஷிகா. சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய இவர் அதிலிருந்து மீண்டு தற்போது பழைய உற்சாகத்துடன் வலம்வருகிறார். அந்த வகையில் அரபிக் குத்து பாடலுக்கு இவர் ஆடிய டான்ஸ் வீடியோ இணையத்தில் பட்டையைக் கிளப்பி இருக்கிறது.
முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா. பின்பு “துருவங்கள் பதினாறு“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியது. இதையடுத்து பல சினிமாக்களில் ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கார் விபத்து நடிகை யாஷிகாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார். மேலும் பழையபடி வொர்க் அவுட், மாடலிங் போட்டோ ஷுட் என்று சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாகச் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் தளபதி விஜய் பாடலான “அரபிக்குத்து“ பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை யாஷியா பழைய எனர்ஜியோடு கிளாமராக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.