close
Choose your channels
soodhukavvum

13 ஆண்டுகளுக்கு பின் நடிகை வித்யா பிரதீப் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Saturday, November 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வித்யா பிரதீப்புக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தற்போது அவரது வீட்டில் விசேஷம் என்ற நிலையில் சக நடிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ’அவள் பெயர் தமிழரசி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வித்யா பிரதீப், அதன்பின்னர் ’விருந்தாளி’, ’சைவம்’, ’பசங்க 2’, ’அச்சமின்றி’, ’மாரி 2’, ’தடையற தாக்க’ ‘தலைவி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு கூட அவர் ’லைட் ஹவுஸ்’, ’சட்டம் என் கையில்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை வித்யா பிரதீப் என்ற புகைப்பட கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் கூட தனது கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். திருமணம் ஆகிய 13 ஆண்டுகள் ஆகியதை அடுத்து அன்பு முத்தங்களுடன் அவர் பதிவு செய்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் கர்ப்பம் ஆகி உள்ளதாகவும், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment