close
Choose your channels

வெண்பனி மலரே… வெண்மையில் அசர வைக்கும் வாணிபோஜன் புகைப்படங்கள்!

Saturday, October 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்திய தமிழ் சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் நடிகை வாணிபோஜன். ஏர்ஹோஸ்டஸாக வாழ்க்கையைத் துவங்கிய இவர் மாடலிங்கில் களம் இறங்கி, பின்னர் சீரியல் ஜொலித்து, தற்போது சினிமா துறையில் கலக்கி வருகிறார். மேலும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற நடிகையாகவும் மாறியிருக்கிறார்.

“தெய்வமகள்“ சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை வாணிபோஜன். அதற்குப் பிறகு பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின்னர் “மீக்கு மாத்ரமே செப்தே“ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் கடந்த ஆண்டு வெளியான “ஓ மை கடவுளே“ திரைப்படத்தில் நடித்தன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து “லாக் அப்“, “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்“, “மலேசியா டூ அம்னீசியா“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதைத்தவிர ஓடிடி தளத்தில் வெளியான “ட்ரிப்பிள்ஸ்“ என்ற வெப் சீரியஸிலும் இவரது நடிப்பை பார்த்து தமிழ் ரசிகர்கள் மிரண்டு போயிருந்தனர். அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்யாவுடன் இணைந்து புதிய வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிப்பைத் தவிர சமூகவலைத்தளப் பக்கங்களிலும் நடிகை வாணிபோஜன் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெள்ளைநிற புடவை உடுத்தி எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன.

மேலும் நடிகை வாணிபோஜன் நடித்துள்ள “பகைவனுக்கு அருள்வாய்“, “மஹான்“, “கேசினோ“, “தாழ்திறவா“ போன்ற அரை டஜன் திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.