close
Choose your channels
NMM

'அழகே பொறாமைப்படும் அழகு': சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு பிரசன்னாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

கடந்த 2000 ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சினேகா அதன்பின் ’ஆனந்தம்’ ’புன்னகை தேசம்’ ’விரும்புகிறேன்’’ ’ஏப்ரல் மாதத்தில்’ ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ ’ஆட்டோகிராப்’ ’’வசீகரா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ படத்தில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாக பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய நிலையிலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வபோது பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சினேகா பிங்க் மாடர்ன் டிரஸ் காஸ்ட்யூமில் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு அவரது கணவர் பிரசன்னா ’அழகி’ என்று கமென்ட் பதிவு செய்துள்ளார்.

’அழகே பொறாமைப்படும் அழகு’ என்பது போன்ற கமெண்ட்ஸ்களை ரசிகர்களும் பதிவாகி வருகின்றனர். 40 வயது ஆகியும் இளம் டீன்ஏஜ் நடிகைகளுக்கு இணையாக இன்னும் அழகாக இருக்கும் சினேகாவின் இந்த புகைப்படங்களுக்கு சுமார் ஒரு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.