close
Choose your channels

ஒரு ஆம்லேட் 300 ரூபாய்.. சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஆரம்பித்த நடிகை சிம்ரன்..!

Sunday, February 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் , சூர்யா உட்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் ’சபதம்’ ‘துருவ நட்சத்திரம்’ ’வணங்காமுடி’ ’அந்தகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிப்பு மட்டும் இன்றி அவர் சில பிசினஸ் செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் சென்னை ஈ சி ஆர் சாலையில் நட்சத்திர ஓட்டலை ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நட்சத்திர ஓட்டல் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என்றும் இந்த ஓட்டலில் டேபிள் புக் செய்ய 700 ரூபாய் கட்டணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆம்லெட் 300 ரூபாய், காலிக் பிரட் 130 ரூபாய், சிக்கன் லாலிபாப் 280 ரூபாய், நண்டு பிரை 350 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறதாம்.

அதேபோல் சைவ உணவு ஒரு பிளேட் 1000 ரூபாய், அசைவ உணவு ஒரு பிளேட் 1500 ரூபாய், ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் சாக்லேட் ஆகியவைகளும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையின் மெயின் ரோட்டில் இந்த ஸ்டார் ஹோட்டல் அமைந்திருப்பதை அடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாகவும் சிம்ரனுக்கு இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.