close
Choose your channels
LoveToday
CWK

அடடே, சிம்ரன் மகன் இளைஞராகிவிட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்

Sunday, June 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 90கள் மட்டும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த சிம்ரனின் மகன் தற்போது இளைஞர் ஆகி உள்ளது அவரது பிறந்த நாள் புகைப்படத்தில் இருந்து தெரிய வந்ததை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, மாதவன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன். மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை சிம்ரன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆதிப் ஓடோ நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியதை இதுகுறித்த புகைப்படங்களை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு, சிம்ரன் மகன் 17 வயது இளைஞர் ஆகி விட்டார் என்றும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஹீரோவுக்கு தகுதி ஆகிவிடுவார் என்று கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.