close
Choose your channels
Don
Nenjukku Needhi

உமா மகேஷ்வரி இறப்புக்கு இதுதான் காரணம்: நடிகை சாந்தி வில்லியம்ஸ்

Sunday, October 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று காலை திடீரென காலமாகிவிட்டார் என்ற செய்தி சின்னத் திரை ரசிகர்களையும் சின்னத்திரை நடிகர் நடிகைகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மெட்டி ஒலி சீரியலில் உமாவுடன் நடித்த நடிகை சாந்தி வில்லியம்ஸ் அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

உமாமகேஸ்வரி எனக்கு மகள் மாதிரி தான். அவருடைய இறப்பை நான் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். கடவுள் ஏன் இப்படி சின்ன வயதில் வாழ வேண்டிய நபர்களை அழைத்துச் செல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. இது மாதிரி நிகழ்வுகள் நடப்பதை பார்க்கும்போது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சித்ரா எங்களை விட்டுச் சென்றார். சித்ராவின் இழப்பிலிருந்து நாங்கள் இன்னும் வெளியே வராத நிலையில் திடீரென உமாவின் மறைவு எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

மேலும் உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஆனால் சமீபத்தில் அவர் மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணம் ஆகி விட்டதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது. இந்த நிலையில் திடீரென அவரது இழப்பு எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்த பேட்டி இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.