close
Choose your channels
Rajavamsam

சன்னிலியோன் இப்படிப்பட்ட நபரா? நடிகர் சதீஷின் ஆச்சரியமான டுவிட்!

Sunday, October 3, 2021 • தமிழ் Comments

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் குறித்து நடிகர் சதீஷ் ஆச்சரியமான சில விஷயங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிகர் சதீஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சன்னிலியோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் ’திரையுலகில் நான் சந்தித்த நபர்களில் மிகவும் இனிமையான நபர்களில் ஒருவர் சன்னி லியோன் என்றும் நல்ல நடிகை என்றும் அதைவிட மிக அபாரமான டான்ஸர் என்றும் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டு உள்ளார்

மேலும் சன்னி லியோன் அவர்களுடன் பணிபுரிவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அதுமட்டுமின்றி அவர் ஒரு மிகச் சிறந்த மனிதநேய மிக்கவராக உள்ளார் என்றும் நடிகர் சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz