close
Choose your channels
ZEBRA

'பூவே உனக்காக' சங்கீதா கணவர் சிம்பு பட இயக்குனரா? ஆச்சரிய தகவல்..!

Friday, March 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'பூவே உனக்காக’ உள்பட கடந்த 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சங்கீதாவின் கணவர் ஒரு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என்பதும் சிம்புவின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சங்கீதா, கே. பாக்கியராஜ் நடித்த ’என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் உருவான ‘பூவே உனக்காக’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. மேலும் ’காலம் மாறிப்போச்சு’ உள்பட ஒருசில திரைப்படங்கள் சூப்பர்ஹிட் ஆனது.

இந்த நிலையில் நடிகை சங்கீதா ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2002ஆம் ஆண்டு சாய் தேஜஸ்வதி என்ற மகள் பிறந்தார்.

சங்கீதாவின் கணவர் சரவணன் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த நிலையில் சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் கௌதம் கார்த்திக் நடித்த ’சிப்பாய்’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment