close
Choose your channels

பிரபல நடிகருடன் காஷ்மீரில் பிறந்த நாள் கொண்டாடிய சமந்தா!

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி அவர் நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது பிறந்தநாளை பிரபல நடிகருடன் காஷ்மீரில் கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே விஜய் தேவரகொண்டா உள்பட படக்குழுவினர் முன் சமந்தா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தாவுக்கு விஜய் தேவரகொண்டா உள்பட படக்குழுவினர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.