close
Choose your channels
NMM
NMM

இளம் தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் அமைச்சர் ரோஜா மகள்?

Tuesday, September 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் இளம் தமிழ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ரோஜா என்பதும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் தொடர்ச்சியாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் ஆந்திராவின் அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா என்பவர் தெலுங்கு திரையுலகில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக அன்ஷூ மாலிகா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் அன்ஷூவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னிடம் அணுகியதாக ரோஜா கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் படிப்பை முடித்த அன்ஷூ, தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.