close
Choose your channels
NMM
NMM

பாவாடை தாவணியை அடுத்து ஸ்லீவ்லெஸ் காஸ்ட்யூம்.. ரம்யா பாண்டியனின் அடுத்த போட்டோஷூட்!

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கிறாரா? என்று ஐயப்படும் அளவுக்கு படு பயங்கர கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த ரம்யா பாண்டியன், அதன் பின் திடீரென பாவாடை தாவணியில் மங்களகரமாக எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் பாவாடை தாவணி காஸ்ட்யூமை அடுத்து தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது .

’ஜோக்கர்’ உள்ளிட்ட திரைப் படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களான குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் தான் ரம்யா பாண்டியன் பிரபலமானார். அதன் பின்னர் ’முகிலன்’ என்ற வெப்தொடர், ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய ஆகிய படங்களில் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். தற்போது ’இடும்பன்காரி’ ’நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.