close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

ரம்யா நம்பீசனின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: இணையத்தில் வைரல்!

Thursday, August 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரம்யா நம்பீசன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை ரம்யா நம்பீசன் கடந்த 2005ஆம் ஆண்டு ’ஒரு நாள் ஒரு கனவு’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ’ராமன் தேடிய சீதை’ ’ஆட்டநாயகன்’ ’நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ ’சேதுபதி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா நம்பீசனுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சற்று முன் ரம்யா நம்பீசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், ‘ஜிம்முக்கு செல்வது, கொழுப்பை குறைப்பது என்பது மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக அல்ல என்றும் என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்றும் வொர்க்-அவுட் செய்வதால் வெளிவரும் வியர்வை ஆனந்தத்திற்கு வழிவகுத்தது’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.