close
Choose your channels
NMM

20 வருடங்களுக்கு முன் உடன் நடித்த பிரபல நடிகரை சந்தித்த ரம்பா: வைரல் புகைப்படம்!

Wednesday, August 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. மேலும் நடிகை ரம்பா திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகிவிட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் இந்தியா வந்தார் என்பதும் அவர் தன்னுடன் நடித்த திரை நட்சத்திரங்களை சந்தித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக குஷ்பு, மீனா, சினேகா உள்பட பலரை சந்தித்த ரம்பா தற்போது பிரபுதேவாவையும் சந்தித்து உள்ளார்.

ரம்பாவின் கணவர் நடத்திய பார்ட்டியில் பிரபுதேவா உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபுதேவா, ரம்பாவின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரம்பாவின் கணவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ‘பிரபுதேவா அவர்கள் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டதற்கு நன்றி என்றும், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அவரை பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் குஷ்பு, மீனா, சங்கீதா உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை ரம்பா, பிரபுதேவாவுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘விஐபி’, ‘காதலா காதலா’ போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.