close
Choose your channels

வாட்டர் பலூனில் குழந்தைகளுடன் விளையாடும் ரம்பா: வைரல் வீடியோ

Tuesday, June 29, 2021 • தமிழ் Comments

நடிகை ரம்பா தனது மூன்று குழந்தைகளுடன் வாட்டர் பலூனில் விளையாடும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கடந்த 90களின் பிரபல நடிகையாக இருந்த ரம்பா, ரஜினி விஜய் அஜித் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருந்தார் என்பது தெரிந்ததே. அதன்பின்னர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ரம்பாவுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்

இந்த நிலையில் தற்போது சினிமாவில் இருந்து நடிகை ரம்பா ஒதுங்கி இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் நெருக்கமாக உள்ளார் என்பதும், அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாட்டர் பலூனில் அவர் தனது மூன்று குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz