close
Choose your channels
siren
lal_salaam

நடிகை ராதா மகளுக்கு இன்று திருமணம்.. நேற்றே வெளியான ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

Thursday, November 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதா மகள் கார்த்திகாவுக்கு இன்று திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று அவர் தனது வருங்கால கணவருடன் எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அவை வைரல் ஆகி வருகிறது.

90 களின் பிரபல நடிகையாக இருந்த ராதாவின் மகள் கார்த்திகா. இவர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ’கோ’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ’புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்ற படத்தில் நடித்த பிறகு அவர் திரைப் படங்களில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று அவர் தனது வருங்கால கணவருடன் எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.