புல்வெளிக்கு நடுவே மின்னும் பச்சை நிற தேவதை… வைரலாகும் இளம் நடிகை புகைப்படம்!
தமிழில் நடிகர் ஜெய் நடித்த “வாமனன்“ திரைப்படத்தில் கடந்த 2009 அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். அடுத்து “180“, “இரும்புக்குதிரை“, “வணக்கம் சென்னை“, “முத்துராமலிங்கம்“, “கூட்டத்திற்குள் ஒருவன்“ போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்திலும் நடித்து இருந்தார்.
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது கன்னடத்தில் RDX, ஜேம்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது புல்வெளிக்கு நடுவே அமர்ந்து தனது செல்ல நாயுடன் போஸ் கொடுத்து இருக்கும் நடிகை ப்ரியா சூரிய ஒளியோடு சேர்ந்து பச்சை நிற உடையில் ஒரு தேவதையைப் போலவே காட்சி அளிக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.