close
Choose your channels
anabel
friendship

குளியல் வீடியோவை வெளியிட்ட அஜித், கமல் பட நடிகை: கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Saturday, July 24, 2021 • தமிழ் Comments

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பார்வதி நாயருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சமீபத்தில் அவர் ஷவரில் குளிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கலாய்த்து கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு வெள்ளையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து ’வீடியோவை கலரில் வெளியிடுங்கள்’ என்றும் ’ரித்திகா சிங்கிற்கு போட்டியா? என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை பார்வதி நாயர் தற்போது ’ஆலம்பனா’ என்ற தமிழ் படத்திலும் ’83’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz