close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

வீல்சேரில் டிரைலர் வெளியீட்டிற்கு வந்த விஜய்-சூர்யா பட நாயகி!

Wednesday, June 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் டிரைலர் வெளியீட்டு விழாவில் வீல்சேரில் வந்து கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘180’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்யாமேனன். அதன் பிறகு ’வெப்பம்’, ‘மாலினி 22 பாளையம்கோட்டை’ ’ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ விஜய் நடித்த ’மெர்சல்’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ என்ற வெப்தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் வீல்சேரில் நித்யா மேனன் கலந்துகொண்டார். தனது வீட்டின் படியில் ஸ்லிப் ஆகி கீழே விழுந்து விட்டதால் காலில் காயம் அடைந்துள்ளதாகவும், இருப்பினும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வீல் சேரில் வந்து கலந்து கொண்டதாகவும் நித்யா மேனன் தெரிவித்துள்ளார். அவரது இந்த செயல் படக்குழுவினர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.