close
Choose your channels
PKK

இந்த கேள்வியை உங்க அம்மாகிட்ட கேட்கலாமே? நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நந்திதா!

Thursday, July 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நந்திதா, அதன்பின்னர் ‘எதிர்நீச்சல்’ ’முண்டாசுப்பட்டி’ ’கலகலப்பு 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பதும் தற்போது அவர் தமிழ் தெலுங்கு என 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நந்திதா ரசிகர்களின் சுவராசியமான கேள்விகளுக்கும் எடக்கு மடக்கான கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தார். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விகளில் ஒன்று ’உங்களுடைய சைஸ் என்ன? என்பது தான். அதற்கு பதில் அளித்த நந்திதா இந்த கேள்வியை நீங்கள் ஏன் உங்கள் அம்மாவிடமோ, சகோதரியிடமோ, தோழிகளிடமோ கேட்கக்கூடாது? அவர்களிடம் கேட்டால் உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும் என்று பதிலடி கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் திரையரங்கில் பார்த்த தனக்குப் பிடித்த திரைப்படம் ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார். மேலும் அவர் தனது பெற்றோருடன் குழந்தையாக இருந்த போதும், பள்ளிப்பருவத்தில் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.