close
Choose your channels

இலவச சிலிண்டரில் பிரியாணி, இலவச கேபிளில் நாடகம்: நமீதா பிரச்சாரம்

Thursday, April 1, 2021 • தமிழ் Comments

அரசு தரும் இலவச சிலிண்டரில் பிரியாணி செய்து அரசு தரும் இலவச கேபிள் மூலம் தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கலாம் என நடிகை நமீதா தேர்தல் பிரசாரம் ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட ஐந்து கூட்டணிகள் களத்தில் உள்ளன. இந்த நிலையில் இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் பாஜகவில் சமீபத்தில் இணைந்த நடிகை நமீதா தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் அவர் திருத்துறைப்புன்ண்டி பாஜக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து வல்லம் என்ற பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது ’அரசு தரும் இலவச சிலிண்டரில் பிரியாணி செய்து அரசு தரும் இலவச கேபிளில் நாடகம் பார்த்துக் கொண்டு பெண்கள் ஜாலியாக இருக்கலாம்’ என்று அவர் கூறினார். மேலும் திமுகர் பெண்களை மதிக்காத கட்சி என்றும் அதனால் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நடிகை நமீதாவின் இந்த பிரச்சாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz