close
Choose your channels
aranmanai

கருப்பு காஸ்ட்யூமில் மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 40 வயதை தாண்டி இருந்த போதிலும் அவர் இன்னும் இளமையுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய் நடித்த ’புதிய கீதை’ விஷால் நடித்த ’சண்டக்கோழி’ மாதவன் நடித்த ’ரன்’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். சமீபகாலமாக அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை இந்த வயதிலும் அவர் பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் காட்டுக்குள் செய்த பயணம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த பதிவுக்கு கேப்ஷனாக, ‘எப்போதாவது நம்மை நாம் கண்டுபிடிக்கும் அளவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். காடுகளில் உள்ள பசுமைக்கு நடுவில் ஒரு நடை பயிற்சி என்பது மிகவும் உன்னதமானது, நம்மை நாமே மறுபரிசீலனை செய்து பார்க்கும் அளவுக்கு இந்த பயணம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

கருப்பு காஸ்ட்யூமில் மீரா ஜாஸ்மினின் இந்த பயணம் குறித்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment