close
Choose your channels
Viruman
Laal

நடிகை ரோஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நீண்டநாள் தோழி நடிகை!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரோஜா. போல்டான நடிப்பை வெளிப்படுத்தும் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “வீரா” படத்தில் நடிகை மீனாவுடன் இணைந்து நடிகை ரோஜாவும் நடித்திருந்தார். அப்போதிருந்தே நடிகை மீனாவும் நடிகை ரோஜாவும் நெருங்கிய தோழிகளாக வலம்வந்தனர். இந்நிலையில் தற்போது 49 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரோஜாவிற்கு நடிகை மீனா தன்னுடைய பாணியில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரோஜா கடந்த 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி பிறந்தார். பின்னர் கடந்த 1992-இல் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான “செம்பருத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் 2002 வரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பிசியான நடிகையாக இருந்த இவர் தொடர்ந்து அரசியலிலும் தீவிரம் காட்டிவந்தார்.

அந்த வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் தெலுங்கு மகிளா மன்றத்தின் தலைவராகவும் இருந்துவந்தார். அந்தக் கட்சியின் சார்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் 2014, 2019 என இரண்டு முறை நகரி தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றிப்பெற்றுள்ளார்.

தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக உருவெடுத்துவரும் நடிகை ரோஜா தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.