close
Choose your channels
Viruman
Laal

நடிகை மீனாவின் அம்மாவை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்!

Saturday, February 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் கண்ணழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை மீனா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.

நடிகை மீனா 80களில் வெளியான பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். ரஜினி, கமல், அஜித் எனப்பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தெலுங்கு, மலையாள மொழி சினிமாக்களிலும் முன்னணி நடிகையாகவே வலம்வந்தார். பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் எனும் என்ஜினியரைத் திருமணம் செய்துகொண்ட நடிகை மீனாவிற்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் பேபி நைனிகா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி“ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 45 வயதான நடிகை மீனா மீண்டும் பல முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “அண்ணாத்த“ திரைப்படத்தில் இவர் இடம்பெற்றிருந்தார்.

தற்போது நடிகை மீனா தனது அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கூடவே அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனத இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.