close
Choose your channels

உள்ளாடை விளம்பரத்தில் கே.எல்.ராகுல்: நடிகை கஸ்தூரியின் கமெண்ட் என்ன தெரியுமா?

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் அந்த விளம்பரங்கள் மிகப் பெரிய அளவில் ரசிகர்களையும் பொது மக்களையும் சென்று அடைகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல் ராகுல் உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த விளம்பர புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி, ‘இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றாலே அவர்களை கோலா, சிப்ஸ், ஆன்லைன் கேம் போன்ற விளம்பரத்தில் தான் பார்க்கிறோம். பல இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடை விளம்பரமும் செய்து வருகின்றனர். ஆனால் உள்ளாடை விளம்பரத்தில் கே.எல்.ராகுலை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஒரு குத்து சண்டை வீரர் போல் அவர் காட்சியளிக்கிறார். இந்த விளம்பரம் பல ஆண்களை கவரும் என நம்புகிறேன்’ என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.