close
Choose your channels
siren
lal_salaam

90களின் கனவுக்கன்னி கனகாவா இவர்? குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம்..!

Monday, November 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் 90களின் கனவு கன்னியாக இருந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா தற்போது உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமராஜன் நடித்த ’கரகாட்டக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தேவிகாவின் மகள் கனகா அறிமுகமானார். இதனை அடுத்து ’தங்கமான ராசா’ ’பெரிய இடத்துப் பிள்ளை’ ’அதிசய பிறவி’ ’துர்கா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அவர் சுமார் 50 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீப காலமாக கனகா குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வந்தன என்றும் அவர் உடல்நலம் இல்லாமல், சிகிச்சை பெற கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி தனது சமூக வலைத்தளத்தில் கனகாவுடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் தேவிகா அவர்களின் மகள் கனகாவை சந்தித்தேன். எனது அருமை தங்கை தற்போது மகிழ்ச்சியாக உள்ளார். நாங்கள் சில நிமிடங்கள் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் கனகாவை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் கனவு கன்னியாக இருந்த கனகாவா இவர்? என்று வருத்தத்துடன் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.