close
Choose your channels
aranmanai

என் வயதை மாற்றுவேன்: பிறந்த நாளில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்த ஜோதிகா!

Wednesday, October 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜோதிகா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் வேற லெவல் ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவின் கேப்ஷனாக ’வயது என்னை மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்றும் என் வயதை நான் மாற்றுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நடிகை மற்றும் தயாரிப்பாலர் ஜோதிகா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பிறந்த நாளின்போது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார் என்று பார்த்தால் பிறந்தநாளில் வியர்க்க விறுவிறுக்க உடலை வருத்தி வேற லெவலில் ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்துள்ளார். கிட்டத்தட்ட தலைகீழாக தொங்கி அவர் செய்த வொர்க்-அவுட் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ’இந்த பிறந்த நாளை நான் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் எனக்கு நானே பரிசளித்து கொள்கிறேன். மிகவும் திறமையான பயிற்சியாளர் மகேஷ் அவர்களுக்கு எனது நன்றி. வயது என்னை மாற்ற நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். என் வயதை நானே மாற்றுவேன் என்று பதிவு செய்துள்ளார். ஜோதிகாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment