close
Choose your channels
aranmanai

'நரசிம்மா' இஷா கோபிகரை ஞாபகம் இருக்கின்றதா? மகளுடன் இருக்கும் மாஸ் புகைப்படம்..!

Friday, March 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த இஷா கோபிகர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் உருவான ’காதல் கவிதை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர். அதன் பிறகு அரவிந்த்சாமி நடித்த ’என்சுவாச காற்றே’ விஜய் நடித்த ’நெஞ்சினிலே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். விஜயகாந்த் நடித்த ’நரசிம்மா’ என்ற திரைப்படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிம்மி நரங் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை இஷா கோபிகர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2014 ஆம் ஆண்டு மகள் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இஷா கோபிகர் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் அவர் சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment