close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

சமூக வலைத்தளத்தில் ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடி வாங்கும் நடிகை யார் தெரியுமா?

Sunday, August 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் நடிகைகள் தங்களது திரைப்படங்களின் அறிவிப்புகள், புகைப்படங்களை ரசிகர்களுக்கு தெரிவிப்பதற்காக சமூக வலைதளங்களில் கணக்கு ஆரம்பித்த நிலையில் தற்போது அந்த சமூக வலைதளங்களே அவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பாதித்து தரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களை வைத்திருப்பதால் விளம்பரங்கள் குவிந்து வருகிறது என்பதும் அந்த விளம்பரத்தில் அவர்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வருமானம் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விளம்பரத்துக்கு 85 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை பெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பதிவு செய்யப்படும் விளம்பரத்திற்கு அதிக கட்டணம் பெற்று வருவதாகவும் தெரிகிறது.

பாலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய திரை நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.