close
Choose your channels

யுகாதி பண்டிகைக்காக சேலையில் கலக்கும் சூர்யா பட நடிகை… வைரல் புகைப்படம்!

Tuesday, April 13, 2021 • தமிழ் Comments

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோரின் புத்தாண்டு கொண்டாட்டம்தான் இந்த யுகாதி பண்டிகை. இந்தப் பண்டிகையை பிரபலங்களும் சிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் “ஜில்லுனு ஒரு காதல்“ படத்தில் மாஸ் நடிப்பை வெளிப்படுத்திய நடிகை பூமிகா சாவ்லாவும் யுகாதி பண்டிகையைச் சிறப்பித்து இருக்கிறார்.

மேலும் இந்த பண்டிகைக்காக சிவப்பு நிறத்தில் புடவை அணிந்த அவர் அந்தப் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று இருக்கிறது. அதோடு அவர் ரசிகர்களுக்கு யுகாதி பண்டிகை வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் கடந்த 2000 ஆம் ஆண்டில் “யுவகுடு“ என்ற படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை பூமிகா சாவ்லா. தெலுங்கை அடுத்து தமிழில் “பத்ரி”, நடிகர் சூர்யாவுடன் “ஜில்லுனு ஒரு காதல்”, “ரோஜா கூட்டம்” போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு “தேரே நாம் “படத்தின் மூலம் இந்திக்கு அறிமுகமானார். அன்று முதல் தற்போது 40 வயதைக் கடந்த பின்னரும் இந்தி சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை பூமிகா எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz