close
Choose your channels
DT
BJP

கொழுகொழுவென இருந்த அஜித் பட நடிகையா இவர்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Saturday, May 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் கொழுகொழுவென என குண்டாக இருந்த நிலையில் தற்போது ஸ்லிம்மாக மாறியது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படமான ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அதன் பின் ’தீபாவளி’ ’இராமேஸ்வரம்’ ’ஜெயம்கொண்டான்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அஜித் நடித்த ’அசல்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிக்கும்போது கொழுகொழுவென இருந்த நடிகை பாவனா சமீபத்தில் லாக்டவுனின்போது உடம்பை குறைத்து காட்டுகிறேன் என சமூக வலைத்தளத்தில் சவால் விட்டிருந்தார். அந்த வகையில் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து தற்போது அவர் ஒல்லியாக மாறியுள்ளார். அவருடைய லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கொழுகொழுவென இருந்த நடிகையா இவர்? என ஆச்சரியத்தில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த ‘96’ படத்தின் கன்னட ரீமேக்கான ’99’ என்ற திரைப்படத்தில் ஜானு கேரக்டரில் நடித்ததன் மூலம் கன்னட திரையுலகில் பாவனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது அவர் மூன்று கன்னட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.