close
Choose your channels
NMM
NMM

என்னை கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாங்க.. பிக்பாஸ் ரகசியங்களை உடைக்கும் நடிகை!

Sunday, September 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய், சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடித்த நடிகை அனுஸ்ரீ இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் முதல் நபராக வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அனுஸ்ரீ கூறும்போது பல பிக்பாஸ் ரகசியங்களை போட்டு உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நீங்கள் நினைப்பது மாதிரி எதுவும் இல்லை என்றும் என்னை அவர்கள் ஒரு நிமிடம் கூட காட்டவில்லை என்றும் எனது அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொறுப்பாளர்களிடம் போராடியும் என்னுடைய காட்சியை அவர்கள் ஒளிபரப்பவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

நாமினேஷனில் நான் சேஃப் ஜோனுக்கு வந்த போதும் என்னை எலிமினேட் செய்தார்கள் என்றும் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் காப்பாற்றிவிட்டு மற்றவர்களை வெளியேற்றுவதுதான் நிகழ்ச்சியின் உண்மையான சொரூபம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேண்டியவர்களை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்றால் எதற்காக தேவையில்லாமல் ரசிகர்களை ஓட்டு போட வைக்கிறீர்கள் என்றும் நாங்கள் சண்டை போட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பல ரகசியங்களை அவர் போட்டு உடைத்துள்ள நிலையில் அவை அனைத்தையும் கீழே உள்ள இந்த வீடியோவில் பார்க்கலாம்.

நடிகை அனுஸ்ரீ கடந்த 80, 90களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்த அனுராதாவின் மகள் என்பதும் இவர் நடிகை மற்றும் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.