close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

நடிகை அஞ்சலியின் வொர்க்-அவுட் பார்ட்னர்: வைரலாகும் வீடியோ

Monday, May 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தற்போது கோலிவுட் திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக விடுமுறையில் இருக்கும் அஞ்சலி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கைகளை அசைப்பதற்கேற்ப அவரது செல்ல நாய்க்குட்டி ஒன்று தலையை ஆட்டுகிறது. இதனை பார்த்த அஞ்சலி, ‘என்னுடைய வொர்க்-அவுட் பார்ட்னர் இவர்தான் போல என்றும் இவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சலி வெளியிட்டுள்ள இந்த க்யூட் வீடியோவுக்கு ரசிகர்கள் நகைச்சுவையான பல கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர் ’இன்னும் ஒரு பத்து நாட்டு முட்டை சாப்பிடுங்க உங்களுக்கு இன்னும் பவர் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை அஞ்சலியின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் வெளியான ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்த நடிகை அஞ்சலி, அனுஷ்காவின் ’நிசப்தம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ஆனந்த பைரவி, ஓ, காண்பது பொய்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.