close
Choose your channels
Viruman
Laal

அமலாபாலை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? அவரே கூறிய பதில்!

Sunday, July 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும் என்று கேட்ட நிலையில் அதற்கு அமலாபால் கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான அமலா பால் இயக்குனர் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு சட்டப்படி பிரிந்தனர்.

அமலாபாலை விவாகரத்து செய்த பின்னர் இயக்குனர் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அமலாபால் விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்வார் என்று செய்திகள் வெளியானாலும் அந்த செய்திகள் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் ’உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? என்று கேட்ட நிலையில் அதற்கு அமலாபால் ’அந்த தகுதி என்னவென்று நானே இன்னும் கண்டுபிடிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும் ’என்னை நானே புரிந்துகொள்ளும் பயணத்தில் தற்போது இருக்கிறேன் என்றும் அதை கண்டு பிடித்தவுடன் கண்டிப்பாக உங்களுக்கு சொல்கிறேன்’ என்றும் கூறியுள்ளார். அமலாபாலின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.