எனக்கும் தங்கம் கிடைத்துவிட்டது: நடிகை அமலாபால் குஷி!


Send us your feedback to audioarticles@vaarta.com


எனக்கும் தங்கம் கிடைத்துவிட்டது என நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்திய திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசா வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த விசா பெற்றவர்கள் ஐக்கிய அரபு நாட்டில் 10 ஆண்டுகளில் அந்நாட்டின் குடிமகன் போலவே கௌரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களாக மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர் என்பதும் தமிழ் திரையுலக நட்சத்திரங்களான த்ரிஷா, பார்த்திபன், பாடகி சித்ரா ஆகியோர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள அமலாபால், ‘தங்கத்தை தேடி ஓடவேண்டும் என்று கூறுவார்கள், நானும் ஓடினேன், எனக்கும் இப்போது தங்கம் கிடைத்துவிட்டது’ என குஷியுடன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.