close
Choose your channels
NMM
NMM

மாறுவேடத்தில் ஒரு தேவதை.. மகளை வர்ணித்த யாஷின் க்யூட் வீடியோ!

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கேஜிஎஃப்’ மற்றும் ‘கேஜிஃஎப் 2’ ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் யாஷ் சற்று முன் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

’கேஜிஎஃப்’ மற்றும் ‘கேஜிஃஎப் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த நடிகர் யாஷ், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் என்பதும் குறிப்பாக ‘கேஜிஃஎப் 2’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் ஆகி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘கேஜிஃஎப் 2’ வெற்றியை அடுத்து, அடுத்த படத்திற்காக யாஷ் தயாராகி வரும் நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது மனைவி ராதிகா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சற்று முன் அவர் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவின் கேப்ஷனாக அவர் ’மாறுவேடத்தில் ஒரு தேவதை! ஆம் அவர்தான் அய்ரா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.