close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

ஆயிரம் நிலவில் ஆரம்பித்த எஸ்பிபி ஆயிரம் பிறைகள் காண வேண்டாமா? பிரபல நடிகரின் வீடியோ

Wednesday, August 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக கோடிக்கணக்கான ரசிகர்களும் ஏராளமான திரையுலகினர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது.

என் அன்பு ரசிகப் பெருமக்களே மற்றும் உலகமெல்லாம் இருக்கின்ற இசை பிரியர்களே! உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். பிரார்த்தனை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவும் உலகத்தில் உள்ள பல கோடி மக்கள் ஒரே நேரத்தில், ஒரு காரியத்திற்காக பிரார்த்தனை செய்யும்போது அதனுடைய சக்தி தனி. அதன் மூலமாக பலர் மீண்டும் வந்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது.

அதுபோல் நம்முடைய எஸ்பிபி அவர்களுக்காக நாம் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யலாம். இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு உலகமெல்லாம் இருக்கும் ரசிகர்கள் எஸ்பிபி அவர்களுக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

’ஆயிரம் நிலவே வா’ என்று வாழ்க்கையை ஆரம்பித்தவர் ’ஆயிரம் பிறைகள் காண வேண்டாமா? அநியாயமாக அவரை கொரோனாவுக்கு பலியாக விடலாமா? எனவே அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.