close
Choose your channels
cred

திமுக சார்பில் போட்டியிட தமிழ் திரைப்பட ஹீரோவின் மனைவி விருப்பமனு!

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments

தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வரும் தேர்தலில் ஒரு சில திரை நட்சத்திரங்களும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவரின் மனைவி திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.

‘பசங்க’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’தூங்கா நகரம்’, ‘எத்தன்’, ‘வாகை சூட வா’, ‘கலகலப்பு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் விமல் மனைவி பிரியதர்ஷினி திமுகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

சற்றுமுன் நடிகர் விமல் தனது மனைவி பிரியதர்ஷினி உடன் திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். மேலும் அவர் உதயநிதியிடம் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விமல் மனைவிக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz