close
Choose your channels
sisa

திருமண வீட்டிற்கு சென்ற நடிகர் விமலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Friday, September 17, 2021 • தமிழ் Comments

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விமல் சென்றபோது அவருடைய விலையுயர்ந்த செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான விமல், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அந்த புகாரில் கடந்த 12ஆம் தேதி ஈசிஆர் சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும் அப்போது ரசிகர்கள் தன்னுடன் செல்பி எடுத்துக் கொண்டு இருந்தபோது தன்னுடைய விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டதாகவும், மூன்று நாட்களாக தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எனவே அந்த செல்போனை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் சூரியின் இல்லத்தில் நடந்த திருமண வீட்டில் 10 சவரன் நகை திருடப்பட்ட நிலையில் தற்போது நடிகர் விமல் திருமணத்திற்கு சென்ற இடத்தில் விலை உயர்ந்த செல்போன் திருடு போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz