close
Choose your channels

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 'அந்நியன்' பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

Sunday, March 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது என்பதும் அதில் நடிகை குஷ்பூ சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் ஷங்கரின் அந்நியன்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் சுரேஷ்கோபி கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்ததில் நிமோனியா காய்ச்சல் என தெரிய வந்ததை அடுத்து அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மெல்ல மெல்ல குணமாகி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் திருச்சூர் தொகுதி முழுவதும் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.