close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

அரசியல் கட்சியில் இணையும் கொரோனா கால ஹீரோ நடிகர்!

Sunday, November 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா நேரத்தில் ஹீரோவாக போற்றப்பட்ட நடிகர் ஒருவர் விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா முதல் அலையின்போது ஹீரோவாக புகழப்பட்டவர் நடிகர் சோனு சூட். கொரோனாவால் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது புலம்பெயர் தொழிலாளர்களை ரயில், பேருந்து மற்றும் விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் என்பதும், அது மட்டுமின்றி வெளி நாட்டில் சிக்கியிருந்த பல மாணவ மாணவிகளை இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி கொரோனாவால் வேலை இழந்த பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்தார் என்பதும் நிதி உதவி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் கொரோனா காலத்தில் ஹீரோவாக புகழப்பட்டார் என்பதும் அது மட்டுமின்றி அவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சோனு சூட் விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாபை சேர்ந்த சோனு சூட் பஞ்சாபிலுள்ள கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும் அவரது சகோதரியும் அரசியலில் இணைந்து விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத்தில் இருவரும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சோனுசூட் காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.