பிரபல நடிகர் ஷர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம் ... மணப்பெண் யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழில் ’எங்கேயும் எப்போதும்’ ’ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’ உள்பட ஒரு சில படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த நடிர் ஷர்வானந்த். இவரது திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்துள்ள நிலையில் மணப்பெண் யார் என்பது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷர்வானந்த் என்பதும் இவருடைய படங்கள் தெலுங்கு திரையுலகில் நல்ல வசூலை குவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஷர்வானந்த் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணப்பெண் அமெரிக்காவில் ஐடி ஐடி துறையில் பணிபுரியும் ரக்சிதா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னாள் ஆந்திர அமைச்சர் போஜ்ஜாலா என்பவரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷர்வானந்த் - ரக்சிதா நிச்சயதார்த்தம் இன்று நடந்துள்ள நிலையில் விரைவில் திருமண தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இன்று நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் தேஜா தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.