close
Choose your channels

முக ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த்!

Monday, March 1, 2021 • தமிழ் Comments

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்பட பலரும் இன்று காலை முதல் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சற்று முன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் மூலம் திமுக தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றும், அவர் தனது டுவிட்டரில் விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.’ ன்று கூறி இருந்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி உலக நாயகன் கமல்ஹாசனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் முக ஸ்டாலினுக்கு தொலைபேசி வழியாக தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவல் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz