சசிகலாவை சந்தித்த நடிகர் பிரபு: அரசியலில் குதிக்கின்றாரா?
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சமீபத்தில் விடுதலையான சசிகலாவை திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் வரிசையாக சந்தித்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்து வந்த நிலையில் தற்போது இளைய திலகம் நடிகர் பிரபுவும் சசிகலாவை சந்தித்து உள்ளார்.
நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் இந்த சந்திப்பில் சசிகலாவின் உடல்நலத்தை பிரபு குடும்பத்தினர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது பிரபு சசிகலாவை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Diamond Babu (@idiamondbabu) February 25, 2021