close
Choose your channels

ஒற்றைச் சொல்லில் நச் பதிலடி கொடுத்த நடிகை ஓவியா… வைரல் டிவிட்!

Thursday, February 18, 2021 • தமிழ் Comments

களவாணி படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றார். அந்நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவின் வெளிப்படையான பேச்சும் தைரியமும் தமிழ் இளசுகளை ஈர்த்தது. இந்நிலையில் மோடியின் தமிழக வருகையையொட்டி பிப்ரவரி 13 ஆம் தேதி நடிகை ஓவியா தனது டிவிட்டரில் Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் பதிவு அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

மேலும் நடிகை ஓவியா திமுக பின்னணியில் இருந்துதான் இந்த ஹேஷ்டேக்கை பதிவிட்டார் என்பது போன்ற கருத்துகளும் கூறப்பட்டன. இதுகுறித்து பாஜக சார்பில் வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் செயலில் நடிகை ஓவியா ஈடுபடுவதாகவும் இறையாண்மையை கெடுக்கும் வகையில் நடிகை ஓவியா செயல்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதுபோன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓவியா மீண்டும் தன்னுடைய டிவிட்டரில் ஒரு ஒற்றைச் சொல்லை பதிவிட்டு இருக்கிறார். அதில் “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம்” (freedomofthoughts) எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவில் நடிகை ஓவியா கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி கேள்வி எழுப்புவது போல கூறி இருப்பதால் தற்போது மீண்டும் நடிகை ஓவியாவின் டிவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலை ஏற்படுத்தி இருக்கிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz