நல்லா தான் இருந்தாரு, திடீரென போய்விட்டார்.. மனோபாலா மறைவு குறித்து மகன் உருக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனது தந்தை நல்லபடியாக உடல் நலம் தேறி வந்ததாகவும் திடீரென அவர் மறைந்து விட்டது தங்களை அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளதாகவும் மனோபாலாவின் மகன் பேட்டி அளித்துள்ளார்
தமிழ் திரை உலக நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா இன்று காலமானதை அடுத்து திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் மனோபாலாவின் மகன் இன்று பேட்டி அளித்தபோது, ‘கடந்த சில வாரங்களாகவே அவர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்த போது நன்றாக தேறி தான் வந்து கொண்டிருந்தார்
கடந்த சில நாட்களாக தான் அவரது உடல் திடீரென மோசம் அடைந்து இன்று காலமாகிவிட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மேலும் அவருடைய இறுதி சடங்கு நாளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். மேலும் பத்திரிகையாளர்கள் என்றால் எனது தந்தைக்கு மிகவும் உயிர் என்றும் எனவே எங்களுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.