close
Choose your channels
PatamPoochi
mayoon

மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பு!

Monday, January 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா 3 ஆவது அலை பாதிப்பு இந்தியாவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக இந்தியாவில் 3 ஆவது அலை கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்திருப்பதாகச் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியது. இதையடுத்து சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகை மீனா, த்ரிஷா, நடிகர் சத்யராஜ், அருண்விஜய் எனப் பலருக்கும் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த வாரம் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது மலையாள பிரபல இயக்குநர் பிரியதர்ஷன், நடிகர் மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய நடிகர் மம்முட்டி எவ்வளவு எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எனக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் உரிய அதிகாரிகளின் ஆலோசனையின்படி நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். இதனால் பொதுமக்கள் அனைவரும் எப்போதும் மாஸ்க் அணிந்துகொண்டு பாதுகாப்பாக இருக்கவும் என நடிகர் மம்முட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.